
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஹலேக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்களிலும், காலின் முன்ரோ 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முஸ்தஃபா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 27 ரன்களிலும் விக்கெட்டை இழக்க இறுதியில் ஹாவெல் 34 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் ஜவதுல்லா, நூர் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.