
'I'm fine with it': Dravid on India losing WTC point due to slow over-rate (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜஹன்னஸ்பர்கில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ஐசிசி பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அபராதங்கள் விதிக்கிறது. மிகக்கடினமாக சில விஷயங்களை முயற்சிக்கிறது ஐசிசி. எங்கு, எப்படி நேரம் வீணாகிறது என்பது கடினம். காயங்கள் ஏற்படுகின்றன, விக்கெட் விழுவதில் சில நேரம் பாதிக்கப்படுகிறது.. இப்படியாக பல காரணங்களால் நேரம் வீணாகிறது. எனவே நேர மேலாண்மையில் மேம்பட வேண்டும்.