ஒவ்வொரு போட்டியிலும் ரிங்கு சிங் இதை செய்வார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது - நிதீஷ் ராணா!
ரிங்கு சிங் மட்டுமல்ல எவராலும் போட்டிக்கு போட்டி 5 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்க முடியாது, அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதும் சரியானதும் அல்ல என்று போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 228 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக், இந்த சீசனின் முதல் சதத்தை அடித்தார். கடினமான இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்தன. அதன் பின்னர் ஜெகதீசன் 36 ரன்கள் அடித்து அவுட் ஆனார். நித்திஷ் ரானா அபாரமாக விளையாடி 75 ரன்கள் குவித்து அவுட்டானார்.
கடந்த போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸ் அடித்து அசாத்திய வெற்றியை பெற்றுக்கொடுத்த ரிங்கு சிங், இன்றைய போட்டியிலும் தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் அரைசதம் இதுவாகும். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 205 ரன்கள் அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Trending
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த நிதிஷ் ராணா கூறுகையில், “இந்த மைதானத்தில் 200 ரன்கள் அடிக்கடி பார்க்க முடியும். அதை சேஸ் செய்ய முடியும். ஆனால் 230 ரன்கள் என்பது மிகப்பெரிய வித்தியாசம். அதற்கான விக்கெட்டும் இது இல்லை. எங்களது முன்னணி பவுலர்கள் சிலரே அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள். இருப்பினும் இந்த மைதானம் அப்படிப்பட்டது என்பதால், அவர்கள் மீது எனக்கு விமர்சனம் எதுவும் இல்லை. அவர்கள்தான் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் எனக்காக வெற்றியை பெற்று தருவார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் ரிங்கு சிங் இதை செய்வார் என்று எதிர்பார்ப்பது மூளை இல்லாத செயல். அதுபோன்று ஒரு சில போட்டிகள் எதிர்பார்க்கலாம் அனைத்து போட்டியிலும் அவரை சார்ந்து இருப்பது அணிக்கும் ஆரோக்கியமானது அல்ல. மற்ற வீரர்களும் முன்வந்து செயல்பட வேண்டும். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நன்றாக செயல்பட்டார்கள். நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். அதுதான் இந்த வித்தியாசத்திற்கு காரணம். இதுபோன்று பேட்டிங் சார்ந்த போட்டிகள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நிறைய பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now