
ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணி வீரராக அசத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் இரு அரை சதங்களுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 141.91. இதுவரை 7.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரம், புதிய ஆல்ரவுண்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் கூடுதல் தகவல். இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக நடைபெறும் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு ரூ. 14 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், “ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 கோடி முதல் ரூ. 14 கோடி வரை வெங்கடேஷ் ஐயருக்குக் கிடைக்கும். அவருடைய பங்களிப்பு, அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. அவருடைய முதல் தர ஆட்டம் மற்றும் லிஸ்ட் ஏ சாதனைகளும் அபாரமாக உள்ளன.