
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இதில் பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட பல கோடி ரூபாய்க்கு சென்றனர். சில வீரர்களை ஆரம்ப விலைக்கு எடுப்பதற்கே அணிகள் முன்வரவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எதிர்பார்க்கப்பட்டபடி சாம் கரன், கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் அதிகபட்ச விலைக்கு சென்றனர். இதில் பலரும் ஆச்சரியப்பட்டது என்னவென்றால், கேன் வில்லியம்சன் போன்ற வீரரை ஆரம்ப விலைக்கு எடுப்பதற்கே பல அணிகள் முன் வரவில்லை. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
கேன் வில்லியம்சன், அனுபவமிக்க பேட்ஸ்மேன், நிலைத்து ஆடக்கூடியவர் மற்றும் கேப்டன் பொறுப்பில் அதீத அனுபவம் மிக்கவர். இவருக்கு இப்படி நேர்ந்தது சற்று ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஆனால் கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் எடுத்தது சற்று ஆறுதலாக இருந்தது. குஜராத் அணியில் அனைத்து இடங்களுக்கும் வீரர்கள் ஏற்கனவே இருக்கையில், எதற்காக கேன் வில்லியம்சனை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? எங்கு ஆடவைப்பார்கள்? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.