
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மெகா ஏலத்தில் என்ன விதிகள் வர வேண்டும், பழைய விதிகளில் உள்ள பிரச்சனை, வீரர்களுக்கான ஒப்பந்தம், இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் ரிடென்ஷன் விதி என்று ஏராளமான விஷயங்கள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துடன், ரவிச்சந்திரன் ஆஸ்வின் யூடியூப் பக்கத்தில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து விவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியானது அவசியம் தேவை என்று கூறிய நிலையில், முன்னாள் வீரரான கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் ஒரு சில வீரர்கள் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள் என்று கூறி, அந்த விதியை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.