Advertisement
Advertisement
Advertisement

ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து, எங்களிடம் கேப்டன் தேர்வுக்கு மற்றொருவரும் உள்ளார் - விக்ரம் சொலாங்கி!

ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, எங்களிடம் கேப்டன் பண்புமிக்க இன்னொரு சிறந்த வீரர் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சொலாங்கி பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 24, 2023 • 13:25 PM
Impact Player Rule Will Bring An Interesting Dynamic To IPL 2023, Says Gujarat Titans' Vikram Solank
Impact Player Rule Will Bring An Interesting Dynamic To IPL 2023, Says Gujarat Titans' Vikram Solank (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக 10 அணிகள் கடந்த வருடம் ஐபிஎல் சீசனில் பங்கேற்றது. ஏற்கனவே இருக்கும் எட்டு அணிகளை தவிர, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் ஆகிய இரு அணிகளும் பங்கேற்றன. பல வருடங்கள் அனுபவமிக்க அணிகளே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறின. ஆனால் புதிதாக இணைந்த இரண்டு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றது. அதில் இன்னும் கூடுதல் சிறப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, இடம்பெற்ற முதல் சீசனிலேயே முதல் முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.

இதில் இன்னும் கூடுதல் சிறப்பான ஒன்று என்னவென்றால், அதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணியிலிருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். மேலும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பில் சற்றும் அனுபவம் இல்லாத இவர் எப்படி செயல்படுவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, அபாரமாக செயல்பட்டு கோப்பையை பெற்று தந்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Trending


இதனால் ஆச்சரியப்பட்ட பிசிசிஐ, ஹர்திக் பாண்டியாவின் மீது கவனம் செலுத்தி அவரை இந்த டி20 உலககோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 போட்டிகளின் கேப்டனாகவும் நியமித்திருக்கிறது. அந்த அளவிற்கு அவர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவை பற்றி பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சோலாங்கி, எங்களிடம் ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும் இன்னும் சிறப்பான கேப்டன் ஒருவர் அணியில் இருக்கிறார் என மற்றொரு இந்திய வீரரை குறிப்பிட்டு பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இதுகுறித்து பேசிய விக்ரம் சொலாங்கி, “ஹர்திக் பாண்டியாவின் மீது எங்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. அதன் காரணமாகவே கடந்த வருடம் அவரை கேப்டனாக நியமித்தோம். நம்பிக்கைக்கு அதிகமாகவே அவர் தனது செயல்பாட்டை வெளிப்படுத்தி, கோப்பையையும் பெற்று தந்து பெருமை சேர்த்திருக்கிறார். தற்போது இந்திய டி20 அணிக்கு கேப்டனாகவும் உயர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சியை தருகிறது.

அணியின் மற்றொரு தூணாக இருக்கும் சுப்மன் கில் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்துகிறார்கள். சமீபத்தில் அவர் இருந்து வரும் பார்ம் எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. பலத்துடன் இருக்கிறோம். சுப்மன் கில்லிடம் மிகச்சிறந்த தலைமை பண்பும் இருக்கிறது. எதிர்காலத்தில் அணியின் கேப்டனாகவும வளர்வார். ஹர்திக் பாண்டியா இல்லாத போது அவரை கேப்டன் பொறுப்பில் பயன்படுத்தவும் தயாராக இருக்கிறோம். இந்திய அணியின் எதிர்காலமாகவும், எதிர்கால கேப்டனாகவும் வளரக்கூடிய அளவிற்கு அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement