
தென் ஆப்பிரிகாவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தொடக்க வீரர் லுயிஸ் டு ப்ளூய் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. இதில் அதிகபட்சமாக டு ப்ளூய் 68 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 55 ரன்களையும் சேர்த்தனர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, நேற்றைய போட்டியில் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை சாம் குக் வீச அதனை எதிர்கொண்ட பார்ல் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் வான் பியூரன் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயற்சித்தார்.