Advertisement

தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!

சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியின் கேப்டன்சியில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர், தல தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement
தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!
தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 25, 2023 • 03:40 PM

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனான இம்ரான் தாஹிர் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் தன் அணியை சாம்பியனாக்கி தோனியின் சாதனையை உடைத்தார். அதாவது 44 வயதில் இம்ரான் தாஹிர் டி20 லீக் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார். சிஎஸ்கே கடந்த ஐபில் தொடரின் சாம்பியன் ஆன போது கேப்டன் தோனியின் வயது 41. ஆகவே அவரை விட 3 வயது மூத்தவரான இம்ரான் தாஹிர் டி20 கோப்பையைக் கைப்பற்றி அதிக வயதில் கோப்பையை வென்று தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 25, 2023 • 03:40 PM

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முதல் கரீபியன் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம்  இதுவாகும். கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது. இதில் டாஸ் வென்ற இம்ரான் தாஹிர் முதலில் கெய்ரன் போலார்ட் அணியான நைட் ரைடர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். 

Trending

ஆனால் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டிவைன் பிரிடோரியஸை ஆட முடியாமல் நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு கீச் கார்ட்டி என்ற வீரர் 38 ரன்களை எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.1 ஓவர்களில் 94 ரன்களுக்குச் சுருண்டது. டிவைன் பிரிடோரியஸ் 4 விக்கெட்டுகளை 26 ரன்களுக்குக் கைப்பற்ற, கேப்டன் இம்ரான் தாஹிர் 4 ஓவர் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

தொடர்ந்து விளையாடிய கயானா அணியில் சயீம் அயூப் 52 ரன்களையும் ஷேய் ஹோப் 32 ரன்களையும் எடுக்க கயானா 14 ஓவர்களில் 99/1 என்று வெற்றி பெற்று முதன் முதலாக கரீபியன் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்ட நாயகனாக டிவைன் பிரிட்டோரியஸ் தேர்வு செய்யப்பட, தொடர் முழுதும் சிறப்பாகச் செயல்பட்ட ஷேய் ஹோப் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல் தொடரில் பர்ப்பிள் கேப் வென்றார். இவர் சிபிஎல் 2023 தொடருக்கு முன்பாக கயானா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது கேப்டன்சியில் கயானா அணி 10 போட்டிகளில் 8இல் வென்று சாதனையையே படைத்துவிட்டது. ஆனால் பிளே ஆஃப் முதல் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. ஆனால் இறுதிப் போட்டியில் இதே அணியை வீழ்த்தி கயானா அணி பழிக்குப் பழி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement