
Imran Tahir Record: ஆண்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸுக்கு எதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக்போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஆண்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயான அணியி ஷாய் ஹோப் 82 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 65 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்களை எடுத்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆன்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 128 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், கயானா அணி இந்த போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.