
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல திறமையான இளம் வீரர்களின் வாழ்க்கையில் பிரகாசமான ஒளியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் பங்கேற்ற பல வீரர்கள் தங்களது தேசிய அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான சாய் சுதர்சன் என்பவர் ஐபிஎல் தொடரில் கெத்து காட்டி வருகிறார்.
முதல் ஆட்டத்தில் இம்பேக்ட் வீரராக வந்த சாய் சுதர்சன் நேற்றைய ஆட்டத்தில் ஆன்ரிச் நோர்ட்ஜே போன்ற மிரட்டலான வேகப்பந்துவீச்சாளர்களை லாபகமாக எதிர் கொண்டு ரன்கள் சேர்த்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 62 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இந்த நிலையில் குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றது. இது குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “முதலில் எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. ஏனென்றால் ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்றே எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடந்தது. அதனால் தான் பந்து அங்கேயும் இங்கேயும் சென்றது. நாங்கள் பவர் பிளேவில் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கொடுத்து விட்டோம். எனினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.