-mdl.jpg)
India Women vs Australia Women 2nd ODI: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றனர்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வ்ருகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுபக்கம் பிரதிகா ராவல் 25 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடி 72 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார்.