
IND-W vs ENG-W 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று முன்னிலை வகிப்பதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் தொடரில் நீடிக்க இந்திய அணி போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
- இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7 மணி