
IN-W vs WI-W 1st ODI, Dream11 Prediction: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய மகளிர் அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியின் காரணமாகவே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. அதேசமயம் டி20 உலகக்கோப்பை சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நியூசிலாந்து அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
IN-W vs NZ-W 1st ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - அக்.24 மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
IN-W vs NZ-W: Ground Pitch Report
இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 33 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறையும், சேஸிங் செய்த அணி 17 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 237 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 365 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
IN-W vs NZ-W: Head-to-Head in ODIs
- மோதிய போட்டிகள் - 54
- இந்திய மகளிர் அணி - 20
- நியூசிலாந்து மகளிர் அணி - 23
- முடிவில்லை - 01