
IN-W vs NZ-W 2nd ODI, Dream11 Prediction: நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
IN-W vs NZ-W 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - அக்.27 மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
IN-W vs NZ-W: Ground Pitch Report
இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 34 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 17 முறையும், சேஸிங் செய்த அணி 17 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 237 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 365 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
IN-W vs NZ-W: Head-to-Head in ODIs
- மோதிய போட்டிகள் - 55
- இந்திய மகளிர் அணி - 21
- நியூசிலாந்து மகளிர் அணி - 23
- முடிவில்லை - 01