
IN-W vs PK-W Match 7, ICC Women's T20 World Cup 2024, Dream11 Prediction: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இரு அணிகள் உலகக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
IN-W vs PK-W : Match Detail: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs பாகிஸ்தான் மகளிர்
- இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
- நேரம் - அக்.07 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
IN-W vs PK-W: Ground Pitch Report
இந்திய மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 99 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 47 முறையும், சேஸிங் செய்த அணி 51 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
IN-W vs PK-W: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 15
- இந்திய மகளிர் அணி - 12
- பாகிஸ்தான் மகளிர் அணி - 03
- முடிவில்லை - 00