
Incredible experience representing India in pink-ball Test, says Smriti Mandhana (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்று முடிந்தது. இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி முடிவின்றி டிராவில் முடிந்தது.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.