
IND-A vs AFG-A Semi-final 2 ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இத்தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்த கையோடும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பர்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND-A vs AFG-A Semi-final 2: Match Detail
- மோதும் அணிகள் - இந்தியா ஏ vs ஆஃப்கானிஸ்தான் ஏ
- இடம் - அல் அமேரத் கிரிக்கெட் மைதானம், அல் அமேரத்
- நேரம் - அக்.25 இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)
IND-A vs AFG-A Semi-final 2 Pitch Report
இந்தியா - ஆஃப்கானிஸ்ஹான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது அல் அமேரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 103 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 43 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 59 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 148 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 220 ரன்களாக இருக்கிறது. இதனால் நிச்சயம் பேட்டர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.