
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் ட (Image Source: Google)
India Masters vs West Indies Masters Dream11 Prediction, International Masters League T20:சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரானது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இதில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவுள்ளனர். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது இன்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
INM vs WIM: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- இந்தியா மாஸ்டர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ்
- இடம் - ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம், ராய்ப்பூர்
- நேரம் - மார்ச் 16, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)