Advertisement
Advertisement
Advertisement

யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan January 29, 2024 • 22:07 PM
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Advertisement

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நாளை நடைபெறும் சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ள்து. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இந்திய அண்டர் 19 vs நியூசிலாந்து அண்டர்19
  • இடம் - மங்காங் ஓவல், ப்ளூம்ஃபோன்டைன்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

ஐசிசி அண்டர் 19 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சில் கண்டு களிக்கலாம். அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை செய்யப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் ப்ளூம்ஃபோன்டைன் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டியில் 300 அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டது. இருப்பினும் இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

உத்தேச லெவன்

இந்தியா யு19 அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கே), பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ், சச்சின் தாஸ், முருகன் அபிஷேக்,சௌமி பாண்டே, நமன் திவாரி, ராஜ் லிம்பானி.

நியூசிலாந்து யு19 அணி: லூக் வாட்சன், டாம் ஜோன்ஸ், ஸ்நேஹித் ரெட்டி, ஆலிவர் திவேத்தியா, ஆஸ்கார் ஜாக்சன் (கே), லாச்லன் ஸ்டாக்போல், சாக் கம்மிங், சாம் க்ளோட், மேட் ரோவ், ரியான் சோர்காஸ், மேசன் கிளார்க்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஆரவெல்லி ராவ்
  • பேட்டர்ஸ்: உதய் சஹாரன், ஆதர்ஷ் சிங்
  • ஆல்-ரவுண்டர்கள்: அர்ஷின் குல்கர்னி (கேப்டன்), முஷீர் கான் (துணை கேப்டன்), ஆஸ்கார் ஜாக்சன், ஸ்னேஹித் ரெட்டி, ஆலிவர் தெவடியா,
  • பந்துவீச்சாளர்கள்: நமன் திவாரி, மேட் ரோவ், சௌமி பாண்டே.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement