
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் ட (Image Source: Google)
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அரையிறுதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா யு19 அணி vs தென் ஆப்பிரிக்க யு19 அணி
- இடம் - வில்லோமூர் பார்க், பெனோனி
- நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
நேரலை