
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 404 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது.
தற்போது அந்த அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 133 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது. இதனால் வங்கதேச அணி இந்திய அணியை விட 271 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் மிஞ்சி உள்ளதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிலும் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குல்தீப் பந்துவீச்சை கொஞ்சமும் எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச வீரர்கள் குறிப்பாக ஷகிபுல் ஹசன் தன்னுடைய விக்கெட்டை குல்தீப் முதல் ஓவரிலேயே இழந்தார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய குல்தீப் யாதவ், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முதலில் பந்து வீசும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது.