
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு, 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 101, ஷுப்மன் கில் 112 இருவரும் சிறந்த துவக்கத்தை தந்தார்கள். அடுத்து, ஹார்திக் பாண்டியா 54 அரை சதம் கடந்தார். மேலும், விராட் கோலி 36, ஷர்தூல் தாகூர் 25 போன்றவர்களும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 385/9 ரன்களை குவித்து அசத்தியது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் டிவோன் கான்வே 138 சிறப்பாக விளையாடி அசத்தினார். அடுத்து ஹென்ட்ரி நிகோலஸ் 42, சாண்ட்னர் 34, ப்ரேஸ்வெல் 26 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். முக்கிய வீரர்கள் பின் ஆலன் 0, டாம் லதாம் 0 ஆகியோர் டக் அவுட் ஆனதுதான், அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தயது.