Advertisement
Advertisement
Advertisement

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 24, 2023 • 10:16 AM
IND V NZ: India Could Look At Making Some Changes As They Seek 3-0 Finish Against New Zealand
IND V NZ: India Could Look At Making Some Changes As They Seek 3-0 Finish Against New Zealand (Image Source: Google)
Advertisement


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

Trending


சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

மேலும், அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர் சபாஷ் அகமதுக்காக வாஷிங்டன் சுந்தர் வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல மற்றொரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம். அட்டகாசமான ஃபார்மில் உள்ள சாஹலுக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கப்படவில்லை.

அதேசமயம் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டிரெண்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் அந்த அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அதிலும் முதல் போட்டியில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபார ஆட்டத்தின் காரணமாக இறுதிவரை போராடியும் தோல்வியைத் தழுவியது.

அவரைத்தவிர்த்து மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் ஓரளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். ஆனால் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்படும் ஃபின் ஆலன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், டாம் லேதம் என அனைவரும் அடுத்தடுத்து சொதப்பியுள்ளதால் அந்த அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

பந்துவீச்சிலும் லோக்கி ஃபர்குசன், ஹென்றி ஷிப்லி, பிளைர் டிக்னர், மிட்செல் சண்ட்னர் ஆகியோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் இந்தியாவுடான தோல்விக்கு பிறகு நியூசிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்ற ஒயிட்வாஷையாவது தவிர்க்கும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் / ரஜத் படிதார், ஹர்திக் பாண்டியா / ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கே), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - கிளென் பிலிப்ஸ்
  • பேட்டர்ஸ் - ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, டெவோன் கான்வே
  • ஆல்ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், முகமது ஷமி, லோக்கி ஃபர்குசன்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement