
IND v NZ: Ravindra Jadeja Scores Fifty, Brings Up 100-run Partnership With Shreyas Iyer (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் 13, சுப்மன் கில் 52, புஜாரா 26, ரஹானே 35 என தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.