1-mdl.jpg)
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர்.
இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. சமீபத்தில் இவ்விரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும்.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் படை களத்தில் குதிக்கிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் போன்ற அதிரடி சூரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள்.