
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதால் பேட்ஸ்மேன்கள் ரண்குவிக்க சிரமப்பட்டனர்.
குறிப்பாக இந்திய அணி வீரர் ஆர்ஷ்தீப் சிங், தீபக் சஹார் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசியதில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. இந்திய அணி பேட்டிங் செய்யும்போதும் சிரமப்பட்டது. எனினும் கே எல் ராகுல் சூரியக்குமாறு யாதவ் ஆகியோர் அரை சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. இது போன்ற ஆட்டத்தில் விளையாடும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். கடினமான சூழ்நிலையில் ஒரு அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம்.