IND vs SA, 1st T20I: இவரது விக்கெட்டையும் வீழ்த்த முயற்சித்தேன் - அர்ஷ்தீப் சிங்!
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய அர்ஷ்தீப் சிங், டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சின் காரணமாகவும், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதம் காரண்கன்களாலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றி அசத்தியது.
Trending
இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய அர்ஷ்தீப் சிங், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய அர்ஸ்தீப் சிங், டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அர்ஷ்தீப் சிங் பேசுகையில், “ஆட்டநாயகன் விருது வென்றால் என்ன பேச வேண்டும் என்பதை தான் நான் யோசித்து கொண்டே இருந்தேன், முதல் ஓவரை தீபக் சாஹர் மிக சிறப்பாக வீசி எனக்கான வேலையையும் இலகுவாக்கிவிட்டார். சரியான ஏரியாவில் பந்துவீச வேண்டும் என்பது மட்டுமே எங்களது திட்டமாக இருந்தது.
டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றியதில் மகிழ்ச்சி, டேவிட் மில்லர் என்னிடம் இருந்து அவுட்ஸ்விங்கர் எதிர்பார்த்திருப்பார், ஆனால் நான் அவரை இன்ஸ்விங்கரில் போல்டாக்கினேன். கேசவ் மஹராஜின் விக்கெட்டையும் கைப்பற்றிவிட வேண்டும் என்றே நினைத்தேன்.
ஆனால் அவர் மிக சிறப்பாக விளையாடிவிட்டார். இதே போன்று அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்திய அணிக்கான எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now