
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் டி காக் 5, ஜனிமேன் மலான் 25 ஆகியோர் ஏமாற்றம் தந்த நிலையில், அடுத்து ராஷா ஹென்ட்ரிக்ஸ் 74, எய்டன் மார்க்கரம் 79 இருவரும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். தொடர்ந்து கிளாசன் 30, மில்லர் 35 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களல் 278/7 ரன்களை சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தவன் 13, ஷுப்மன் கில் 28 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினார்கள்.