Advertisement

SA vs IND, 1st ODI: டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை நடக்கிறது.

Advertisement
IND v SA: Deposed Captains Kohli, De Kock Gear Up For One-Day Series
IND v SA: Deposed Captains Kohli, De Kock Gear Up For One-Day Series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 18, 2022 • 03:27 PM

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 18, 2022 • 03:27 PM

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீரர்கள் அதை தவற விட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி அதற்கு அடுத்த 2 டெஸ்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது.

Trending

இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை (19ஆம் தேதி) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

முன்னதாக ஒருநாள் போட்டிகளுக்கு மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாததால் கேஎல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான் ஆகியோரும் கம்பேக் கொடுக்கவுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி எல்லா வகையிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போல், ஒருநாள் தொடரையும் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா - ஜன்னெமன் மலான், ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், குயின்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.

இந்தியா - ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/ ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement