Advertisement

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - டெம்பா பவுமா!

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.

Advertisement
IND v SA: Lots of confidence to be taken from David Miller's performance, says Temba Bavuma
IND v SA: Lots of confidence to be taken from David Miller's performance, says Temba Bavuma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 03, 2022 • 05:00 PM

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 03, 2022 • 05:00 PM

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.

Trending

இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார். அதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, 240 ரன்கள் இலக்கை எட்டுவது சாதரண விசயம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டெம்பா பவுமா, “பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு நான் செயல்படவில்லை. திட்டங்களையும் நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. 220 ரன்கள் இலக்காக இருந்தால் கூட எங்களால் எட்டிவிட முடியும் என்றே நினைத்தோம், ஆனால் 240 ரன்கள் என்பது சாதரண விசயம் கிடையாது. 

டேவிட் மில்லரால் என்ன முடியும் என்பது இந்த போட்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது. அவர் எங்கள் அணியின் மிக சிறந்த வீரர், அவர் களத்தில் இருக்கும் வரையில் எங்களுக்கும் நம்பிக்கை இருக்கும். பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே இந்த போட்டியில் தோல்விக்கான முக்கிய காரணம், தவறுகளை திருத்தி கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement