Advertisement

SA vs IND, 2nd Test: மீண்டும் ஏமாற்றிய புஜாரா, ரஹானே; தடுமாற்றத்தில் இந்தியா!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

Advertisement
IND v SA: South Africa On Top As India Lose Three, Score 53/3
IND v SA: South Africa On Top As India Lose Three, Score 53/3 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 03, 2022 • 04:14 PM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 03, 2022 • 04:14 PM

அதேசமயம் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து இந்திய கேப்டன் விராட் கோலி விலகினார். இதனால் கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் கோலிக்கு மாற்று வீரராக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டார்.

Trending

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேல் ராகுல் - மயங்க் அகர்வால் தொடக்கம் தந்தனர். இதில் மயங்க் அகர்வால் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே ஆகியோர் ஒலிவியரின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் 26 ரன்களைச் சேர்த்து பொறுமையாக விளையாடி வருகிறார். 

இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒலிவியர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement