SA vs IND, 3rd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து இன்னிங்ஸைத் தொடங்கியது.
Trending
இப்போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக விலகிய சிராஜுக்கு பதில் உமேஷ் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும் விராட் கோலி வருகையின் காரணமாக ஹனுமா விஹாரிக்கு இப்போட்டியில் வாய்ப்பு தரப்படவில்லை.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துணைக்கேப்டன் கேஎல் ராகுல் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மயங்க் அகர்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 33 ரன்களிலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் கேப்டன் விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் புஜாரா 26 ரன்களுடனும், விராட் கோலி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் டுவைன் ஒலிவியர், காகிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now