டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது - டீன் எல்கர்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை கேப் டவுன் நகரில் நடைபெறும் 2ஆவது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு ஒயிட் வாஷ் தோல்வியை பரிசளிக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா காயமடைந்துள்ளதால் டீன் எல்கர் தம்முடைய கடைசி போட்டியில் கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளார். மெதுவாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்பு பெறாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5,331 ரன்களை குவித்து சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார்.
Trending
மேலும் 2021/22 இல் 2 – 1 என்ற கணக்கில் கேப்டனாகவும் அவர் இந்தியாவை தோற்கடித்த பெருமைக்குரியவர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேன். சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் வெற்றிகள் தொடர் வெற்றிகளை மட்டுமே விரும்புகிறேன். அது தான் நீங்கள் உங்களுடைய அணியுடன் பகிர்ந்து கொள்ளும் மகத்தான நினைவாகும். டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது. ஒருவேளை உலகக் கோப்பை பெரிய வெற்றியாக இருக்கலாம். ஆனால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
எனவே என்னுடைய இந்த வாய்ப்பில் நான் வெற்றி பெற விரும்புகிறேன். முதல் போட்டியில் தோற்றதால் இத்தொடரை எப்படியும் நாங்கள் தோற்க மாட்டோம் என்ற நிலையை எட்டியுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்போட்டியில் டிரா செய்தால் தான் அது எங்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். புத்தாண்டில் நடைபெறும் இந்த போட்டி எங்களுக்கு மிகப் பெரியதாகும். எனவே 2 – 0 என்ற கணக்கில் வெல்வதை மட்டுமே நாங்கள் மனதில் வைத்துள்ளோமே தவிர டிரா செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now