
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் இஷான் கிஷன் 37, அடுத்து ஹார்திக் பாண்டியா 29 ஆகியோரை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே சேர்த்தனர். இதனால், இந்திய அணி 94/5 என திணறிக் கொண்டிருந்தது. அப்போது தீபக் ஹூடா 41, அக்சர் படேல் 31 இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்ததால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 162/5 ரன்களை சேர்த்தது.
இலங்கை அணியில் இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் குஷல் மெண்டிஸை 28 ரன்களை அடித்ததைத் தவிர, நிஷங்கா 1 (3), தனஞ்ஜெயா 8 (6), அசலங்கா 12 (15), ரஜபக்சா 10 (11) என அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்தார்கள்.