அஸ்வின் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் - ஜஸ்ப்ரீத் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக துணைக்கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சிய போட்டிகளை வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.
விராட் கோலியின் 100ஆவது சர்வதேச டெஸ்ட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இந்தியாவின் துணை கேப்டன் பும்ரா பேசினார்.
Trending
அப்போது, துணை கேப்டன் நியமனம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த பும்ரா, “கேப்டன் ஆவதற்கு சுழற்பந்துவீச்சாளர், வேகப்பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன் என்று தான் இருக்க வேண்டியது என்பதில்லை. எனக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
என் பணியை சிறப்பாக செய்வேன். ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார். பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் வெளிநாட்டில் விளையாடியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த பும்ரா, இந்திய ஆடுகளங்கள் எனக்கு ஒன்றும் புதுசு கிடையாது. எனக்கு வாய்ப்பளிக்கும் போது எல்லாம் சிறப்பாக செயல்படுவேன்.
டி20 போட்டி எல்லாம் வேகமாக நடைபெறும், டெஸ்ட் போட்டியில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறோம் என்பதை பொருத்தது. வீரராக மனதளவில் சில அட்ஜஸ்மண்ட் செய்து கொள்வது முக்கியம். மொஹாலியில் தற்போது ஒரு பயிற்சி முகாம் தான் நடத்தியுள்ளோம். இதுவரை பிளேயிங் லெவன் மற்றம் காம்பினேஷன்கள் குறித்து முடிவு எடுக்கவில்லை.
அஸ்வினும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எந்த வீரருக்கும் தற்போது காயம் இருப்பதாக தெரியவில்லை. 100 டெஸ்ட் என்பது மிகப் பெரிய சாதனை. இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிப்பது என்பது எங்கள் கையில் இல்லை. எங்கள் நோக்கம் எல்லாம் போட்டியில் வெல்வது தான்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now