
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது நல்ல திறமையுடைய அணியாக வளர்ந்துள்ளது.
இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட அனுபவம் கலந்த இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கும் இந்தியா சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 11) நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - ஐஎஸ் பிந்த்ரா கிரிக்கெட் மைதானம், மொஹாலி
- நேரம் - இரவு 7 மணி