இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை இந்தூரிலுள்ள ஹொல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - ஹோல்கார் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
- நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது. ஏறத்தாழ 14 மாதங்களுக்கு பின் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலையில் உள்ளது. வீரர்கள் திறமையாக செயல்பட்டு அணிக்கு நல்ல உத்வேகம் அளித்து வருகின்றனர்.
முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பந்துவீச்சில் முகேஷ் குமார், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தடம் பதித்து வருகின்றனர். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பாராதவிதமாக தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
மறுபுறம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த போட்டியில் நட்சத்திர வீரர் முகமது நபி மற்றும் அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறினர். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி போன்றோர் ரன்களை வாரி வழங்கியதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுக வீரர் ரஹ்மத் ஷா தனது வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் நாளைய போட்டியில் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா ஸஸாய் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
இந்தூர் மைதானம் வரலாற்றில் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாக இருக்கிறது. குறிப்பாக இங்குள்ள பிட்ச் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஃபிளாட்டாக இருந்து வருகிறது. போதாக்குறைக்கு இங்குள்ள பவுண்டரிகளின் அளவும் சிறியதாக இருக்கிறது. எனவே அதை பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் அடித்து நொறுக்கலாம். இருப்பினும் இம்முறை பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.
நேரலை
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும். மேலும் ஓடிடி தளமான ஜியோ சினிமாவிலும் இத்தொடரை நேரலையில் காணலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 06
- இந்தியா - 05
- ஆஃப்கானிஸ்தன் - 0
- முடிவில்லை - 01
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
நியூசிலாந்து: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான் (கே), அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ்
- பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்ராஹிம் ஸத்ரன், விராட் கோலி
- ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி, அக்சர் படேல், அஸ்ரதுல்லா ஒமர்சாய், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே
- பந்து வீச்சாளர்: அர்ஷ்தீப் சிங்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now