Advertisement

IND vs AUS, 1st T20: ரிச்ச, தீப்தி காட்டடி; ஆஸிக்கு 173 டார்கெட்!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
IND vs AUS, 1st T20: Deepti, Richa' Cameo helps India post a total of 172 on their 20 overs
IND vs AUS, 1st T20: Deepti, Richa' Cameo helps India post a total of 172 on their 20 overs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 09, 2022 • 08:27 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 09, 2022 • 08:27 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Trending

இப்போட்டியின் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய ஷஃபாலி வர்மா 10 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 28 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - தேவிகா வைதியா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தீப்தி சர்மாவும் பவுண்டரிகளை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது.

அதிலும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி தீப்தி சர்மா அட்டகாசம் செய்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காம் இருந்த தீப்தி சர்மா 15 பந்துகளில் 36 ரன்களையும், தேவிகா வைதியா 25 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement