Advertisement
Advertisement
Advertisement

IND vs BAN, 1st T20I: வருண், அர்ஷ்தீப் அபாரம்; வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement
IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 06, 2024 • 08:49 PM

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 06, 2024 • 08:49 PM

அதன்படி இன்று குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இதிய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் மயங்க் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Trending

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைனும் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 14 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் - தாவ்ஹித் ஹிரிடோய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 12 ரன்களில் ஹிரிடோய் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா மற்றும் ஜக்கார் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிரஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடி வந்த ரிஷாத் ஹொசைன் 11 ரன்களிலும், தஸ்கின் அஹ்மத் 12 ரன்களிலும், ஷொரிஃபுல் இஸ்லாம் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹிதி ஹசன் மிராஸ் 35 ரன்களைச் சேர்க்க, வங்கதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement