
India vs Bangladesh 1st Test, Dream11 Prediction: வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது. அதன்படி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ததுடன் டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைத்த கையோடு, இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இந்திய அணியோ இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதாலும் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
IND vs BAN, 1st Test: Match Details
- மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - செப்டம்பர் 19, காலை 9.30 மணி
IND vs BAN, 1st Test Live Streaming Details
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஸ்பொர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காண முடியும்.
IND vs BAN: Head-to-Head In T20Is
- மோதிய போட்டிகள் - 13
- இந்திய அணி - 11
- வங்கதேசம் - 0
- முடிவில்லை - 02
IND vs BAN: Pitch Report