
India vs Bangladesh 2nd Test, Dream11 Prediction: வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றுவருகிறது.
இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவே வெற்றிபெற்ற கையோடும், வங்கதேச அணி தோல்வியைச் சந்தித்த கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ND vs BAN, 2nd Test: Match Details
- மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
- இடம் - கிரீன் பார்க் மைதானம், கான்பூர்
- நேரம் - செப்டம்பர் 27, காலை 9.30 மணி