
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் மூலமாக 436 ரன்களைக் குவித்து, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி 31 ரன்களிலும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஒல்லி போப் 196 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து இரட்டை சதத்தை அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.