
India vs England 2nd ODI Dream11 Prediction: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும், அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND vs ENG 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - பராபதி கிரிக்கெட் மைதானம், கட்டாக்
- நேரம் - பிப்வரி 09, மதியம் 1.30 மணி