இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் அதற்கு பதிலடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - விடிசிஏ மைதானம், விசாகப்பட்டினம்
- நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இப்போட்டியில் கேஎல்ராகுல், ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விராட் கோலி முதல் 2 டெஸ்டில் விளை யாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அணி பலவீனத்துடன் காணப்படுகிறது.
இருப்பினும் இந்திய அணியில் சர்ஃபாஸ் கான், ராஜத் பட்டிதார் ஆகிய அறிமுக வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேசமயம் டாப் ஆர்டர் வீரர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து சோபிக்க தவறுவதால் மீண்டும் அவர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோருடன், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்ப்ர்த் பும்ரா சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், முகமது சிராஜின் இடம் கேள்விகுறியாகியுள்ளது.
மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கடந்த டெஸ்டில் அந்த அணியின் வெற்றிக்கு ஒல்லி போப், டாம் ஹார்ட்லி முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும் இப்போட்டியில் சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சோயிப் பஷீர் அணியில் இடம்பிடுத்துள்ளார்.
மெலும் கடந்த போட்டியில் விளையாடிய மார்க் வுட்டிற்கு பதிலாக இப்போட்டியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ரெஹான் அஹ்மத், ஜோ ரூட் உள்ளிட்டோரும் அணியில் இடம் பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன,
நேரலை
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். அதேசயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை நேரலையில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.
பிட்ச் ரிப்போர்ட்
விசாகப்பட்டினம் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக இருந்துள்ளது. இதனால் இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என நம்பலாம். இதனால் இங்கிலாந்து அணி முதல் போட்டியைப் போலவே 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இந்திய அணியும் இப்போட்டியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 132
- இந்தியா - 31
- இங்கிலாந்து - 51
- முடிவில்லை - 50
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், ஸ்ரீகர் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், சோயிப் பஷீர்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்டர்ஸ்: பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒல்லி போப்
- ஆல்ரவுண்டர்கள்: ரவி அஸ்வின், ஜோ ரூட் (கேப்டன்), அக்ஸர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர்
- பந்துவீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now