Advertisement
Advertisement
Advertisement

இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 06, 2024 • 19:52 PM
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை(மார்ச் 07) நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
  • இடம் - ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா
  • நேரம் -  காலை 9.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்திய அணியின் இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், சர்ஃப்ராஸ் கான், தூருவ் ஜுரெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும், பேட்டிங்கில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இத்தொடரில் இரண்டு இரட்டை சதத்துடன் 655 ரன் குவித்து அசத்தியுள்ளார். 

அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 342 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 297 ரன்களையும் இத்தொடரில் விளாசியுள்ளன. இவர்களைத் தவிர்த்து அறிமுக வீரர்களான சர்ஃப்ராஸ் கானும், துருவ் ஜுரெலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் பேட்டிங் வலிமையை காட்டுகிரது. அதேசமயம் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. 

அதேபோல் இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு போட்டிகளாக பேட்டிங்கில் சரிவர சோபிக்க தவறிவரும் ராஜத் பட்டிதார் இப்போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டு, அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு முதல் போட்டியில் வெற்றிபெற்றாலும், அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணின் பேட்டிங்கைப் பொறுத்தவரை பென் டக்கேட், ஸாக் கிரௌலி, ஜோ ரூட் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்துவருகிறது. 

ஆனால் பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருடன் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியிலுள்ள மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிட்சி ரிப்போர்ட்

தர்மசாலா கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ள மைதானமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு வானிலை மேகமூட்டமாக இருக்கும் என்பதால், இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 135
  • இந்திய அணி - 35
  • இங்கிலாந்து அணி - 51
  • முடிவில்லை - 50

நேரலை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். அதேசயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை நேரலையில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ராஜத் பட்டிதார்/வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப்/ முகமது சிராஜ்

இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: துருவ் ஜுரெல், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ்: சர்ஃப்ராஸ் கான், பென் டக்கெட் , யஷஸ்வி ஜெய்ஸ்வால்(துணை கேப்டன்), பென் ஸ்டோக்ஸ்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவி அஸ்வின், ஜோ ரூட், ரவீந்திர ஜடேஜா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஜஸ்ப்ரித் பும்ரா, டாம் ஹார்ட்லி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement