‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் ரோஹித் சர்மா, 2019 இறுதியில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை பிடித்தார். அதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக இருந்தும் வருகிறார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் நன்றாக ஆடியிருக்கிறார். ஆனால் அதேவேளையில், வெளிநாடுகளில் (SENA) பெரிதாக சோபித்ததில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், அந்த தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், “இந்தியாவில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி 79. ஆனால் வெளிநாடுகளில் வெறும் 27. இங்கிலாந்தில் அவரது டெஸ்ட் சராசரி இன்னும் மோசம்; வெறும் 24 தான். டியூக் பந்தில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சனை எதிர்கொள்வதில் ரோஹித் சர்மாவுக்கு பிரச்னை இருக்கிறது. அதிலும் ஓபனிங்கில் ரொம்ப கஷ்டம். எனவே இங்கிலாந்தில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now