
Ind vs NZ, 2nd T20I: Harshal is very skillful bowler, he used slower ball really well, says Rohit Sh (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் கேஎல் ராகுல் 65 ரன்களும், ரோகித் சர்மா 55 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.