
India vs New Zealand 1st Test Dream11 Prediction: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 16) பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடும், நியூசிலாந்து அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்த கையோடும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND vs NZ 1st Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - அக்.16, காலை 9.30 மணி