
Ind vs NZ: Guptill surpasses Kohli to become highest run-scorer in men's T20Is (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து ராஞ்சியில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - டேரில் மிட்செல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் 31 ரன்களை எடுத்த மார்ட்டின் கப்தில் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.